இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த கைல் மேயர்ஸ் - காணொளி!
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்ததுடன் 201 ரன்களைக் குவித்து அசத்தியது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எவின் லூயிஸ் 100 ரன்களுடனும், அவருக்கு துணையாக விளையாடி கைம் மேயர்ஸ் 92 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளைடாடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ் என அனைவரும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த பனுகா ராஜபக்ஷா - டிம் செய்ஃபெர்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்த, செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 17. 2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியில் பேட்ரியாட்ஸ் அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும் அந்த அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் மேயர்ஸ் இப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் கைல் மேயர்ஸ் விளாசிய ஒரு சிக்ஸரானது ஓட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், இதுகுறித்த காணோளியும் வைரலாகி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி, இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை ரோஸ்டன் சேஸ் வீசிய நிலையில் அந்த ஓவரின் முதல் பந்திலேயே கைல் மேயர்ஸ் இமாலய சிக்ஸர் ஒன்றை விளாசி அனைவரையும் மிரளவைத்தார். மேலும் அவர் விளாசிய அந்த சிக்ஸராந்து மைதானத்தின் மேற்கூரைக்கு மேல் சென்று விழுந்தது. இந்நிலையில் கைல் மேயர்ஸ் விளாசிய இந்த இமாலய சிக்சர் குறித்த காணொளியானத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.