6,6,6,6, - ஷமி ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஸ்டொய்னிஸ் - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதரபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தவாக அறிவித்து சன்ரைசர்ஸ் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி, முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 36 ரன்களையும், பிரப்ஷிம்ரன் சிங் 42 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 11 பந்துகளில் 34 ரன்கள் குவித்தது அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் அணி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். அதன்படி இன்னிங்ஸின் கடைசி ஓவரை முகமது ஷமி வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி நான்கு பந்துகளை எதிர்கொண்ட மார்கஸ் ஸ்டொய்னிஸ் 4 பந்துகளிலும் சிக்சர் அடித்து மிரட்டியதுடன் அணிக்கு தேவையான ஃபினிஷிங்கையும் கொடுத்தர். இந்நிலையில் ஸ்டொய்னிஸ் சிக்ஸர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹல் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சஹால்.
இம்பேக்ட் வீரர்கள் - சூர்யன்ஷ் ஷெட்ஜ், யாஷ் தாக்கூர், பிரவீன் துபே, வஷாக் விஜய்குமார், ஹர்பிரீத் ப்ரார்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(w), அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ்(c), ஹர்ஷல் படேல், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி, ஈஷான் மலிங்கா
Also Read: Funding To Save Test Cricket
இம்பேக்ட் வீரர்கள் - அபினவ் மனோகர், சச்சின் பேபி, ராகுல் சாஹர், வியான் முல்டர், ஜெய்தேவ் உனத்கட்