வைடு தரமறுத்த நடுவர்; கொந்தளித்த மேத்யூ வேட் - வைரல் காணொளி!

Updated: Mon, Dec 04 2023 14:00 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. வழக்கத்துக்கு மாறாக இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய கடினமான நிலையில் பிட்ச் இருந்தது. இந்தியா போராடி 160 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆஸ்திரேலியா சேஸிங் செய்தது.

ஆஸ்திரேலியா 7 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் மேத்யூ வேட் மட்டுமே அணியை வெற்றிக்கு அழைத்து செல்லக் கூடிய பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் மேத்யூ வேட் 20வது ஓவரின் முதல் பந்தை சந்தித்தார். அர்ஷ்தீப் சிங் அந்த ஓவரை வீசினார். அது மேத்யூ வேட் தலைக்கு மேலும் பவுன்ஸாகி சென்றது. 

விதிப்படி இது போன்ற பந்து வீசப்பட்டால் அது வைடு ஆகும். ஆனால், களநடுவர் அதற்கு வைடு தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மேத்யூ வேட்  பந்து வைடு என சைகை காட்டினார். ஆனால், அதனை களநடுவர் மறுத்துவிட்டார்.  இதனால் மைதானத்தில் தனது கேபத்தை வெளிப்படுத்திய மேத்யூ வேட் கள நடுவரை வார்த்தைகளால் சாடினார். 

அதன்பின் அந்த ஓவரின் மூன்றாவது பந்தை அவர் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தார். ஆனால், அவர் பந்தை சரியாக அடிக்காததால் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் தற்போது களநடுவர் கடைசி ஓவரில் வைடு தராமல் உதவியால் இந்தியா வென்றது என மற்ற நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளனர். அதேசமயம் இக்காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை