ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய முகமது சிராஜ் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 38 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 39 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 63 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிதளவில் ரன்களை சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 8 ரன்னிலும், ரியான் ரிக்கெல்டன் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து முகமது சிராஜ் பந்துவீச்சில் விகெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இந்நிலையில் ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய முகமது சிராஜின் காணொளி வைரலாகியுள்ளது. அதன்படி இன்னிங்ஸின் முதல் ஓவரை சிராஜ் வீசிய நிலையில் அதனை எதிர்கொண்ட ரோஹித் சர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அசத்தினார். பின்னர் ஓவரின் 4ஆவது பந்தை உடம்பை நோக்கி வீசிய நிலையில், அதனை எதிர்பார்க்காத ரோஹித் சர்மா பந்தை தவறவிட்டதுடன் க்ளீன் போல்டாகினார். இதனால் இப்போட்டியில் 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரோஹித் ஆட்டமிழந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், காகிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இம்பேக்ட் வீரர்கள் - மஹிபால் லோமரர், கிளென் பிலிப்ஸ், இஷாந்த் சர்மா, அனுஜ் ராவத், வாஷிங்டன் சுந்தர்
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சஹர், டிரென்ட் போல்ட், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாராயண ராஜு.
Also Read: Funding To Save Test Cricket
இம்பேக்ட் வீரர்கள் - ராபின் மின்ஸ், அஸ்வனி குமார், ராஜ் பாவா, கார்பின் போஷ், வில் ஜாக்ஸ்