நேஹால் வதேராவை யார்க்கர் மூலம் க்ளீன் போல்டாக்கிய மொஹ்சின் கான் - வைரல் காணொளி!

Updated: Tue, Apr 30 2024 22:29 IST
நேஹால் வதேராவை யார்க்கர் மூலம் க்ளீன் போல்டாக்கிய மொஹ்சின் கான் - வைரல் காணொளி! (Image Source: Google)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, மும்பை அணி முதல் 6 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் நேஹால் வதேரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷான் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நேஹால் வதேரா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 46 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடியதுடன் 35 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங் கொடுத்தார். 

 

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக மொஹ்சின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த நேஹால் வதேராவை மொஹ்சின் கான் தனது அபாரமான யார்க்கரின் மூலம் க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை