முதல் பந்திலேயே ரச்சினை க்ளீன் போல்டாக்கிய மொஹ்சின் - காணொளி!

Updated: Fri, Apr 19 2024 20:17 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்றுவரும் 34ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. லக்னோவில் நடைபெற்றுவரும் இப்போட்டியி டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் சென்னை அணியின் அதிரடி தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா ரன்கள் ஏதுமின்றி சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் ஈடுபட்டார். 

இதில் 17 ரன்களைச் சேர்த்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டை யாஷ் தாக்கூர் கைப்பற்றினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 33 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஹானே - ஜடேஜா கூட்டணி விக்கெட் இழப்பை தடுத்து வருவதுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இதன்மூலம் சிஎஸ்கே அணி முதல் 6 ஓவர்களுக்கு 51 ரன்களைச் சேர்த்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை லக்னோ அணி தரப்பில் மொஹ்சின் கான் வீசா, அதனை ரச்சின் ரவீந்திரா எதிர்கொண்டார். அந்த ஓவரின் முதல் பந்தையே மொஹ்சின் கான் யார்க்கராக வீச, அதனை ரச்சின் கணிக்கத் தவறி பந்தை தவறவிட, அது நேரடியாக ஸ்டம்புகளை தாக்கியது. 

 

இதனால் ரச்சின் ரவீந்திரா தனது முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் முதலிரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா முதல் முறையாக முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்துள்ளார். இக்காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை