ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம் 6 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 8 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 30 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடி வந்த ஆயூஷ் பதோனி 22 ரன்களுக்கும், அப்துல் சமத் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் 63 ரன்களில் ஆட்டமிழக்க, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி செய்த ரன் அவுட் ரசிகர்களை வியப்பில் ஆல்த்தியது. அதன்படி இப்போட்டியின் 20ஆவது ஓவரை மதீஷா பதிரான வீசிய நிலையில், அதனை அப்துல் சமத் எதிர்கொண்டார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை மதீஷா பதிரான வைடாக வீசிய நிலையில், அப்துல் சமத் கூடுதலாக ஒரு ரன்னை சேர்க்க வேண்டி சிங்கிள் எடுக்க முயற்சி செய்தார். 

அப்போது பந்தை பிடித்த எம் எஸ் தோனி நான் ஸ்டிரைக்கர் பக்கத்தை நோக்கி த்ரோ அடித்ததுடன் ஸ்டம்புகளையும் தகர்த்தார். இதனால் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த அப்துல் சமத் 20 ரன்களை எடுத்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் மகேந்திர சிங் தோனி செய்த இந்த ரன் அவுட் குறித்தான காணொளி தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பந்த(கேப்டன்), டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி

Advertisement

இம்பாக்ட் வீரர்கள்: ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், ஷாபாஸ் அகமது, மேத்யூ பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி(கேப்டன்), அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இம்பாக்ட் வீரர்கள்: ஷிவம் துபே, கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ், சாம் குர்ரன், தீபக் ஹூடா

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News