ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத் - காணொளி!

Updated: Wed, Sep 25 2024 12:51 IST
Image Source: Google

சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய லூசிய கிங்ஸ் அணியானது ஜான்சன் சார்லஸ் மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்தாலும் 218 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் 59 ரன்களையும் சேர்த்தனர். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் கீரன் பொல்லார்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜேசன் ராய் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய கேசி கார்டி, நிக்கோலஸ் பூரன், டிம் டேவிட், அகீல் ஹொசைன், கேப்டன் கீரன் பொல்லார்ட் மற்றும் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் என அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

மேலும் அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் கிறிஸ் ஜோர்டன் 27 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்க்ள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நைட் ரைடர்ஸ் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கிங்ஸ் அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்போட்டியின் போது செயின்ட் லூசியா கிங்ஸ் அணியைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நூர் அஹ்மத், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கி வழியனுப்பி வைத்தார். இதனால் நைட் ரைடர்ஸ் அணியின் தோல்வியும் உறுதியானது. இந்நிலையில் நூர் அஹ்மத் விக்கெட்டை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை