பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த ஓடியன் ஸ்மித் - வைரலாகும் காணொளி!

Updated: Fri, Aug 30 2024 11:02 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி, இத்தொடரின் முதல் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில்  நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணியானது ஃபகர் ஸமான் மற்றும் ஜூவெல் ஆண்ட்ரூ ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜூவெல் ஆண்ட்ரூ 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்களையும், ஃபகர் ஸமான் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்களையும் சேர்த்தனர். பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் நோர்ட்ஜே, ஷம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பேட்ரியாட்ஸ் அணியில் எவின் லூயிஸ் 29 ரன்களையும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 25 ரன்களையும், கைல் மேயர்ஸ் 39 ரன்களையும், ஓடியன் ஸ்மித் 27 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் டோமினிக் டிரேக்ஸ் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

ஆனால் இறுதியில் நோர்ட்ஜே 4 ரன்கலையும், ஷம்ஸி ஒரு ரன்னையும் என சேர்த்து கடைசி பந்தில் அணியை வெற்றிபெற செய்தனர். இதன்மூலம் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக கைல் மேயர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் இப்போட்டியில் பேட்ரியாட்ஸ் அணி வீரர் ஓடியன் ஸ்மித் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கெட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி ஃபால்கன்ஸ் அணி வீரர் சாம் பில்லிங்ஸ் பவுண்டரி அடிக்க முயற்சித்து தூக்கியடித்த பந்தை ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஓடியன் ஸ்மித் சரியாக கணித்ததுடன் பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை