ஃபீல்டிங்கில் அசத்திய பில் சால்ட்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும், ரியான் பராக் 30 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 75 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய துருவ் ஜூரெல் இரண்டு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர், குர்னால், ஹேசில்வுட், தயாள் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் பில் சால்ட் ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அதன்படி, இன்னிங்ஸின் 13ஆவது ஓவரை ஆர்சிபி தரப்பில் குர்னால் பாண்டியா வீசிய நிலையில், ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடித்தார். அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த பில் சால்ட் தலைக்கு மேல் சென்ற பந்தை தாவிபிடித்ததுடன் அதனை மீண்டும் மைதானத்திற்குள் வீசி 5 ரன்களை தடுத்து நிறுத்தினார். இந்நிலையில், இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
இம்பாக்ட் வீரர்கள்: ஷுபம் துபே, யுத்வீர் சிங் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, குமார் கார்த்திகேயா, குணால் சிங் ரத்தோர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.
Also Read: Funding To Save Test Cricket
இம்பாக்ட் வீரர்கள்: தேவ்தத் பாடிக்கல், ரசிக் தார் சலாம், மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங்