105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் குர்பாஸின் காணொளி!

Updated: Sat, Jun 08 2024 13:04 IST
105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் குர்பாஸின் காணொளி! (Image Source: Google)

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோரது சிறப்பான தொடக்கத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 80 ரன்களையும், இப்ராஹிம் ஸத்ரான் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 44 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியானது சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வேன், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், கிலென் பிலீப்ஸ், மார்க் சாப்மேன் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து 75 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபருக்கி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது டி20 உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இன்றைய ஆட்டத்தில் 56 பந்துகளை எதிர்கொண்ட குர்பாஸ் அதில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களை விளாசித்தள்ளினார். அதிலும் குறிப்பாக அவர் அடித்த சிக்ஸர் ஒன்று 105 மீட்டர் தூரத்திற்கு சென்றது. இதன்மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக தூரத்திற்கு சிக்ஸர் அடித்த வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இந்நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் சிக்ஸர் அடிக்கும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை