அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரமந்தீப் சிங் - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முலான்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் பிரியான்ஷ் ஆர்யா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது பந்திலேயும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பிரப்ஷிம்ரன் சிங் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி தற்சமயம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் கேகேஆர் வீரர் ரமந்தீப் சிங் பிடித்த அபார கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன்படி இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை ஹர்ஷித் ரானா வீசிய நிலையில் ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் ஓவர் கவர் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்து பந்தை தூக்கி அடித்த நிலையில், அவரது ஷாட்டில் போதிய அளவு வேகம் இல்லாத காரணத்தால் பந்து காற்றில் இருந்தது. அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ரமந்தீப் சிங் முன்பக்கமாக டைவ் அடித்ததுடன் அபார கேட்ச்சை பிடித்து அசத்தினார். இந்நிலையில் ரமந்தீப் சிங்கின் இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி தற்சமயம் வைரலாகி வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, அன்ரிச் நோர்ட்ஜே, வருண் சக்கரவர்த்தி.
இம்பாக்ட் வீரர்கள்: மனிஷ் பாண்டே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பவல், லுவ்னித் சிசோடியா, அனுகுல் ராய்
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஜோஷ் இங்கிலிஸ், ஷஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
Also Read: Funding To Save Test Cricket
இம்பாக்ட் வீரர்கள்: விஜய்குமார் வைஷாக், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யாஷ் தாக்கூர், ஹர்ப்ரீத் ப்ரார், பிரவீன் துபே