ஸ்டார்க் பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ரிங்கு சிங்; வைரலாகும் காணொளி!

Updated: Wed, Mar 20 2024 13:40 IST
ஸ்டார்க் பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ரிங்கு சிங்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)

ஐபிஎல் டி20 தொடரின் 17ஆவது சீசன் இன்னும் நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. மேலும் இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

அதேசமயம் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரான மிட்செல் ஸ்டார்க் நேற்று முந்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார். நடந்து முடிந்த வீரர்கள் மினி ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.27.75 கோடிக்க் ஏலத்தில் எடுத்து கொல்கத்தா அணி நிர்வாகம் ரசிகர்களை பிரமிக்க வைத்தனர். இதனால் இத்தொடரில் மிட்செல் ஸ்டார்கின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

 

இந்நிலையில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மிட்செல் ஸ்டார்க் இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிங்கு சிங்குவிற்கு பந்துவீசி பயிற்சி செய்தார். அப்போது மிட்செல் ஸ்டார்க் யார்க்கர் வீச முயற்சி செய்ய அது புல்டாஸாக சென்றது. அதனை ரிங்கு சிங் தனது ஃப்ளிக் ஷாட் மூலம் மிட்விக்கெட்டிற்கு மேல் சிக்சர் அடித்து மிரளவைத்தார்.  இதையடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ரிங்கு சிங் சிக்சர் விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை