அணிக்கு தேர்வான மகிழ்ச்சியில் செல்போன் & பாஸ்போர்ட்டை மறந்து விட்டேன்; ரியான் பராக் ஓபன் டாக்!

Updated: Wed, Jul 03 2024 13:22 IST
அணிக்கு தேர்வான மகிழ்ச்சியில் செல்போன் & பாஸ்போர்ட்டை மறந்து விட்டேன்; ரியான் பராக் ஓபன் டாக்! (Image Source: Google)

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ரியான் பராக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது அவருக்கு ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் தனது அறிமுக சர்வதேச தொடரில் ரியான் பராக் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து ரியான் பராக் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பிசிசிஐ வெளியிட்டுள்ள காணொளில் ஒரு சுவாரஸ்யமான விசயத்தையும் கூறி இருக்கிறார்.

ரியான் பராக் கூறுகையில், “இந்திய அணியில் அறிமுகமாகுவதற்காக ஆர்வமாக உள்ளேன். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்த பின், மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பயணிக்கும் மகிழ்ச்சியில் நான் எனது செல்போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை எங்கு வைத்தேன் என்பதை மறந்துவிட்டேன். ஆனால் நான் கிளம்புவதற்கு முன்னதாக அவற்றை கண்டுபிடித்துவிட்டேன்.

இந்த அணியில் பல புதிய முகங்கள் உள்ளனர், ஆனால் நாங்கள் ஒன்றாக விளையாடியதால் எனக்கு அவர்கள் வயதானவர்கள். இப்போது நாங்கள் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே தொடரானது எப்போதுமே எனக்கு ஸ்பெஷலாக இருக்கும். ஏனெனில் அந்த மைதானத்தில் நான் எனது முதல் சர்வதேச போட்டியை விளையாடும்போது, ​​அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்” என்று அந்த காணொளியில் தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் ஜிம்பாப்வே சென்றடைந்துள்ள காணொளியை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பவுசெய்துள்ளது. இதையடுத்து இந்திய அணியானது வரும் ஜூலை 06ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. மேலும் இந்த தொடருககன முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை