ஐபிஎல் தொடரிலும் ஹால் ஆஃப் ஃபேமை அறிமுகம் செய்த ஆர்சிபி!

Updated: Tue, May 17 2022 14:45 IST
Image Source: Google

கிரிக்கெட்டில் அதிகமாகப் பங்களித்தவர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம்  என்கிற கெளரவம் அளிக்கப்படும். அதேபாணியில் ஐபிஎல் போட்டியில் ஹால் ஆஃப் ஃபேமைத் தொடங்கியுள்ள ஆர்சிபி அணி, முன்னாள் வீரர்களான கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு இந்தக் கெளரவத்தை அளிப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த 2011-17 வரை ஆர்சிபி அணியில் கெயில் விளையாடியுள்ளார். அதன்பின் கடந்த வருடம் வரை பஞ்சாப் அணியில் இடம்பெற்றார். அதேபோல் 2011 முதல் கடந்த வருடம் வரை ஆர்சிபி அணிக்காக டி வில்லியர்ஸ் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் கிறிஸ் கெயில், ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோருக்கு ஹால் ஆஃப் ஃபேம் அறிவிப்பு தொடர்பான காணொளி ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் இருவரின் பெயர்களையும் கோலி அறிவித்தார். 

 

பிறகு நேர்காணல் வழியாக கெய்லும் டி வில்லியர்ஸும் தங்களுடைய மகிழ்ச்சியை ஆர்சிபி அணியினருடன் பகிர்ந்துகொண்டார்கள். தற்போது இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை