ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணியில் ஆஃபிப் ஹூசைன் 39 ரன்களும், மெஹதி ஹசன் 38 ரன்களும் எடுத்தனர்.

Advertisement

இதனால் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 183 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் குசேல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 60 ரன்கள் சேர்த்தார்.

Advertisement

இறுதியில் கேப்டன் ஷனாகா 45 ரன்கள் விளாச, கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை அணி. அப்போது இலங்கை அணி வீரர் கருணரத்னே வெற்றி கொண்டாட்டத்தின் போது நாகினி டான்ஸ் ஆடி, வங்கதேச வீரர்களை வெறுப்பேற்றினார்.

இதற்கு காரணம், போட்டி தொடங்கவதற்கு முன் இலங்கை அணி கேப்டன் ஷனாகா வங்கதேசத்தில் ஷகிப் உல் ஹசனை தவிர உலகத்தர பந்துவீச்சாளர்கள் இல்லை என்று கூறினார். இதற்கு பதிலடி தரும் விதமாக, இலங்கை அணியில் பேட்ஸ்மேன்களும், இல்லை பவுலர்களும் இல்லை என்று கூறி பதிலடி தந்தார்.

இதனால் கடுப்பில் இருந்த இரு அணி வீரர்களும் உயிரை கொடுத்து விளையாடினார். இதனால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுப்போக்கு கிடைத்தது. மேலும், இலங்கை அணியை இதற்கு முன்பு கடந்த காலங்களில் வீழ்த்திய வங்கதேச அணி பாம்பு போல் நடனமாடி வெறுப்பேற்றினர். இதற்கு பதிலடி தரும் விதமாக தான் கருணரத்னே நாகினி டான்ஸ் ஆடினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News