தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025: நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸின் சூர்யா ஆனந்த் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார். 

Advertisement

மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணியில் பலச்சந்தர் அனிருத் 48 ரன்களையும், ஆதீக் உர் ரஹ்மான் 36 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. ராயல் கிங்ஸ் தரப்பில் சோனு யாத்வ் 3 விக்கெட்டுகளையும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராயல் கிங்ஸ் அணி தரப்பில் கேப்டன் அருண் கார்த்திக் 67 ரன்களையும், இறுதிவரை போராடிய சோனு யதாவ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணி 158 ரன்களில் ஆல் அவுட்டானது. பாந்தர்ஸ் தரப்பில் சூர்யா ஆனந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்முலம் மதுரை பாந்தர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை சூர்யா ஆனந்த் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை சூர்யா வீசிய நிலையில், ஓவரின் முதல் பந்திலேயே 32 ரன்களைச் சேர்த்திருந்த சோனு யாதவின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் ஓவரின் மூன்றாவது பந்தில் வல்லிப்பன் யுதீஷ்வரனையும் க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.

Also Read: LIVE Cricket Score

அதன்பின் ஓவரின் 4ஆவது மற்றும் 5அவது பந்துகளில் சச்சின் ரதி மற்றும் இமானுவேல் ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். இதன்மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக நெல்லை ராயல் கிங்ஸ் வீரர் சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் சூர்யா ஆனந்த் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News