இமாலய சிக்ஸரை பறக்கவிட்ட டிம் டேவ்ட் - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Aug 13 2025 20:06 IST
Image Source: Google

Tim David Six Video: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், டிம் டேவிட் மட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங்  செய்த தென்னாப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 125 ரன்களைச் சேர்த்தார். அவரைத்தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவற, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 218 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷூயிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்பின் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் 50 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்றவர்கள் சோபிக்க தவறினர். ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்கா தரப்பில் குவேனா மபாகா, கார்பின் போஷ் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்த நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தாலும், அந்த அணி வீரர் டிம் டேவிட் விளாசிய இமாலய சிக்ஸர் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, இன்னிங்ஸின் 7ஆவது ஓவரை தென்னாப்பிரிக்க தரப்பில் நகாபா பீட்டர் வீசிய நிலையில், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை டிம் டேவிட் எதிர்கொண்டார். அப்போது ஷார்ட் பிட்சாக இருந்த அந்த பந்தை டிம் டேவிட் டீப் மிட் விக்கெட் திசையில் இமாலய சிக்ஸர் ஒன்றை அடித்தார். 

Also Read: LIVE Cricket Score

அந்த சிக்ஸரானது மைதானத்தின் மேற்கூரையைத் தாக்கியது. மேற்கொண்டு அவர் அந்த ஓவரில் மற்றொரு சிக்ஸரையும் பறக்கவிட, ஆஸ்திரேலிய அணி மொத்தமாக அந்த ஓவாரில் 19 ரன்களை விளாசி இருந்தது. இந்நிலையில் டிம் டேவிட்டின் சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை