க்ளென் பிலீப்ஸை நினைவுபடுத்திய டிம் ராபின்சன் - காணொளி!

Updated: Sun, Mar 16 2025 12:40 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்து சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷ்தில் ஷா 32 ரன்களையும், சல்மான் அகா 18 ரன்களையும், ஜஹாந்தத் கான் 17 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்பினர். 

நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியதுடன், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். 

இதில் டிம் செஃபெர்ட் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபின் ஆலன் 29 ரன்களையும், டிம் ராபின்சன் 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்துஅ நி விரர் டிம் ராபின்சன் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரை கைல் ஜேமிசன் வீசிய நிலையில் அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட ஷதாப் கான் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் கட் ஷாட்டை விளையாட முயற்சி செய்த நிலையில், பந்து அவரின் பேட்டில் பட்டு காற்றில் பறந்தது. 

Also Read: Funding To Save Test Cricket

அப்போது பாய்ண்ட் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டிம் ராபின்சன் அபாராமன கேட்சை பிடித்து அனைவரையும் வியக்கவைத்தார். ஏனெனில் அவரின் அந்த கேட்ச்சைப் பார்க்கும் போது அந்த அணியின் கிளென் பிலீப்ஸை நினைவு கூறும் வகையில் டிம் ராபின்சன் இந்த அபாரமான கேட்ச்சைப் பிடித்து அசத்தினார். இதனான் காரணமாக இந்த கேட்ச் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை