மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டாக்கிய வருண் சக்ரவர்த்தி - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த பிரியான்ஷ் ஆர்யா 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 69 ரன்களிலும், பிரப்ஷிம்ரன் சிங் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 83 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைச் சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்நிலையில் இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல்லை வருண் சக்ரவர்த்தி க்ளீன் போல்டாக்கி அசத்தினார். அதன்படி இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசிய நிலையில், மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து அசத்திய ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் பவுண்டரி அடித்த மேக்ஸ்வெல், அடுத்த பந்தை எதிர்கொள்ள முடியாமல் க்ளீன் போல்டாகியதுடன் 7 ரன்களை மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். இந்நிலையில் இக்காணொளி வைரலாகி வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
இம்பேக்ட் வீரர்கள்: ஹர்பிரீத் ப்ரார், முஷீர் கான், விஜய்குமார் வைஷாக், சூர்யன்ஷ் ஷெட்ஜ், பிரவீன் துபே
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரோவ்மன் பாவெல், வைபவ் அரோரா, சேத்தன் சகாரியா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
Also Read: LIVE Cricket Score
இம்பேக்ட் வீரர்கள்: ஹர்பிரீத் ப்ரார், முஷீர் கான், விஜய்குமார் வைஷாக், சூர்யன்ஷ் ஷெட்ஜ், பிரவீன் துபே