ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 170 ரன்களை குவித்தது.

Advertisement

அதன்பின் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement

இதில் ஆர்சிபி வெற்றி, தோல்வியை விட விராட் கோலி பேட்டிங் செய்த விதம் தான் ரசிகர்களுக்கு பெரும் சர்ஃப்ரைஸாக இருந்தது. தொடக்க வீரர் டூப்ளசிஸ் டக் அவுட்டாகிவிட்டார். இதன் பின்னர் பொறுப்புடன் ரன் குவிக்க வேண்டும். இதனால் கோலி தொடக்கம் முதலே அதிரடி காட்டி ரன் வேட்டை நடத்தினார்.

ஏதோ ஒரு போக்கில் ஆடாமல், ஒவ்வொரு ஷாட்டும் தனது பழைய ஸ்டைலை போல மிகவும் நம்பிக்கையுடன் செய்தார். இது அவரின் கம்பேக் என அனைவருக்கும் புரிந்தது. மொத்தமாக 53 பந்துகளை சந்தித்த கோலி, 58 ரன்களை விளாசினார். நடப்பு தொடரில் 2 டக் அவுட், 3 ஒற்றை இலக்க ஸ்கோர் என மோசமான ஃபார்மில் இருந்த அவர், அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அரைசதம் அடித்த பிறகு கோலி என்ன செய்தார் என்பது தான் இணையத்தில் பரவி வருகிறது. பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த அனுஷ்கா சர்மா, மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று உணர்ச்சிப்பூர்வமாக கூச்சலிட்டு கொண்டாடினார். இதனை பார்த்த கோலி மனைவிக்கு களத்திலேயே நன்றி கூறினார்.

 

Advertisement

தென் ஆப்பிரிக்காவுடனான தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்க ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது தனக்கு எந்தவித ஓய்வும் தேவையில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News