சஹாவின் பேட்டிங்கைப் பாராட்டிய விராட் கோலி!

Updated: Sun, May 07 2023 18:30 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் விருத்திமான் சஹா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே சஹா அதிரடி காட்டி ஆடினார். அவர் 20 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி குஜராத அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 21 பந்துகளிலும், 24 பந்துகளிலும் விஜய் சங்கர் அரைசதம் அடித்திருக்கிறார். தொடர்ந்து விளையாடிய சஹா 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

 

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 12.1 ஓவர்களில் 142 ரன்கள் குவித்துள்ளது. இந்த நிலையில், சஹாவின் பேட்டிங்கைப் பார்த்து வியந்த விராட் கோலி என்ன ஒரு வீரர் என்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்துள்ளது. இதில் சுப்மன் கில் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 94 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::