சகோதரியை கட்டியணைத்து அழுத வநிந்து ஹசரங்கா; வைரலாகும் காணொளி!

Updated: Sat, Aug 26 2023 20:42 IST
Image Source: Google

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வநிந்து ஹசரங்கா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளும், 44 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளும், 55 டி20 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்த நிலையில், வணிந்து ஹசரங்கா தனது சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வணிந்து ஹசரங்கா தனது சகோதரியை கட்டியணைத்து அழுகிறார். அதே போன்று அவரது சகோதரியும் கண்ணீர் விட்டு அழும் தான் வைரலாகி வருகிறது.

 

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசிய கோப்பை 2023 தொடர் நடக்க இருக்கிறது. வரும் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் பெற்றுள்ள வணிந்து ஹசரங்கா காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை