இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடங்கு முன்னர் மைதானத்தில் அதிகளவிலான ஈரப்பதம் இருந்ததன் காரணமாக டாஸ் நிகழ்வானது ஒரு மணி நேரம் தாமதமானது. இதனையடுத்து தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisement

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படதா நிலையில், வங்கதேச அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து 24 ரன்களை எடுத்திருந்த ஷத்மான் இஸ்லாமும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் வங்கதேச அணி 29 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸில் தனது முதல் ஓவரை ஆகஷ் தீப் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஸாகிர் ஹசன் தடுத்து ஆட முயற்சித்தார்.

ஆனால் அந்த பந்தை ஸாகிர் ஹசன் தவறாக கணிக்க, அது நேராக பேட்டில் பட்டு எட்ஜ் எடுத்து சென்றது.  அப்போது 5ஆவது ஸ்லீப்பில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தரையோடு ஒட்டியவாறு அசத்தலான கேட்ச்சை பிடித்து அசத்தினார். ஒருகணம் நடுவர்கள் கேட்ச்சின் உண்மை தன்மையை சோதித்த நிலையிலும், மூன்றாம் நடுவர் அவுட் என்ற தீர்ப்பையே வழங்கினார். இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. 

 

இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா(கேட்ச்), ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த்(வ), கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

Advertisement

வங்கதேசம் பிளேயிங் லெவன்: ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், கலீத் அகமது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News