இது ஒட்டுமொத்த அணியின் செயல்திறன் - ரஜத் படிதார்!

Updated: Mon, Apr 28 2025 13:01 IST
Image Source: Google

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவி ரன்களைச் சேர்க்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 41 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், விராட் கோலி மற்றும் குர்னால் பாண்டியா இணை அதிரடியாக விளையாடி அரைசதங்களை கடந்ததுடன் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் விராட் கோலி 51 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த குர்னால் பாண்டியா 73 ரன்களையும், டிம் டேவிட் 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.3 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  12 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் குர்னால் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய ரஜத் படிதார், “இது ஒட்டுமொத்த அணியின் செயல்திறன். பந்து வீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதம் பார்க்க நன்றாக இருந்தது. நான் முன்பு சொன்னது போல், நாங்கள் மைதானங்களைப் பார்த்து விளையாடும் அணி அல்ல. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். சேஸிங் செய்வது விக்கெட்டை பற்றிய தெளிவைத் தருகிறது. ஏனெனில் பந்துவீச்சு மற்றும் ஸ்கோரை பற்றிய தெளிவை அது தருகிறது. 

Also Read: LIVE Cricket Score

ஏனெனில் அதற்கேற்ப நாங்கள் திட்டமிட முடியும். இது ஒரு அடையக்கூடிய இலக்காக இருந்தது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதனால் இந்த வெற்றிக்கான அனைத்து பாராட்டுகளும் அனைத்து பந்து வீச்சாளர்களைச் சாரும். சேஸிங் குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக இருந்தோம். ஆர்சிபியை வழிநடத்தும்போது அது மிகவும் நன்றாக இருக்கிறது. பல சிறந்த வீரர்கள் உள்ளனர். கற்றுக்கொள்ள இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை