Dc vs rcb ipl 2025
இது ஒட்டுமொத்த அணியின் செயல்திறன் - ரஜத் படிதார்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவி ரன்களைச் சேர்க்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 41 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Dc vs rcb ipl 2025
-
இந்த போட்டியில் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - அக்ஸர் படேல்!
முதல் இன்னிங்ஸில் விக்கெட் சற்று கடினமாக இருந்தது என்று நினைத்தேன், ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் இருந்ததால் பேட்டிங் செய்ய அது எளிதாக மாறிவிட்டது என்று அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கோலி, குர்னால் அரைசதம்; கேப்பிட்டல்ஸை பழி தீர்த்தது ராயல் சேலஞ்சர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அபாரமான த்ரோவின் மூலம் படிதாரை ரன் அவுட்டாக்கிய கருண் நாயர் - காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸின் கருண் நாயர் அடித்த ரன் அவுட் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: ஆர்சிபிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47