கபா டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் - ஜோஸ் பட்லர்

Updated: Tue, Dec 07 2021 22:28 IST
We Can Beat Australia At The Gabba, Says Jos Buttler (Image Source: Google)

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய கிரிக்கெட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. 

இதில் கபாவில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன. இதற்காக இரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கபாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவோம் என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பட்லர், “எந்த நேரத்திலும் நீங்கள் இங்கிலாந்து அணியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை வரலாறு சொல்கிறது. அது உற்சாகமளிக்கிறது. 

ஆஸ்திரேலியா இங்கு (பிரிஸ்பேன்) சிறப்பாக விளையாட முனைகிறது, ஆனால் இந்த மைதானத்தில் சமீபத்தில் இந்தியாவிடம் தோற்றது. அதனால் இங்கு அவர்களை வீழ்த்துவது சாத்தியமான ஒன்று தான். 

கபாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முன்னிலைப் பெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை