இந்தியாவில் நல்ல வீரர்கள் மேம்படுத்தப்படுவதில்லை - அஸ்வின் பளீர்!

Updated: Sat, Mar 11 2023 10:44 IST
We can't protect such players - Ravichandran Ashwin! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த இமாலய ஸ்கோருக்கு முக்கிய காரணமாக இருந்தது உஸ்மான் கவாஜா - கேமரூன் கிரீன் ஆகியோர் தான். 170 ரன்களுக்கு 4 விக்கெட்கள் சென்றுவிட்ட சூழலில் 5ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 180 ரன்களை அடித்தார். மறுபுறம் கேமரூம் கிரீன் 114 ரன்களை விளாசினார். 23 வயதாகும் கேமரூன் கிரீன் இதுவரை 28 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள போதும் இது தான் அவரது முதல் சதமாகும். அதுவும் இந்தியாவில் வந்துள்ளது. இந்த போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்திய அசத்திய அஸ்வின் தான் கேமரூன் கிரீனையும் இறுதியில் கட்டுப்படுத்தினார். 

இதுகுறித்து பேசிய அஸ்வின், “கேமரூன் கிரீன் மிகச்சிறந்த வீரர். ஆரம்ப கட்டத்தில் இருக்கும் அவரை வடிவத்திற்கு கொண்டு வர வேண்டும். நல்ல உயரம், சரியான பேட்டிங் தன்மைகள், எது போன்ற பந்துகளுக்கு எப்படி நகர வேண்டும் என நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். பந்துவீச்சிலும் சரியான திட்டத்தை செயல்படுத்துகிறார். ஒரு தலைமுறையில் இதுபோன்று ஒரு வீரர் மட்டுமே இருப்பார் என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

எனினும் இந்தியாவில் இதுபோன்ற வீரரை நீண்ட காலத்திற்கு இதே போன்ற ஃபார்முடன் காப்பது என்பது முடியாத காரியம் ஆகும். ஒவ்வொரு வீரரும் வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளோம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிதானமாக வீரர்களை மேம்படுத்துவார்கள். ஆனால் இந்தியாவில் ஃபார்மில் இருக்கும் போதே நன்றாக ஆட வேண்டும், பின்னர் ஃபார்ம் போனவுடன் வெளியேற வேண்டும். இருக்கும் வரையில் இருக்கட்டும் என்ற போக்கு தான் உள்ளது” என அஸ்வின் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை