எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள சவாஸ் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 27 ரன்களையும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப், விஜயகுமார், ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 73 ரன்களையும், பிரியன்ஷ் ஆர்யா 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்ததன் மூலம் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியான்ஸ் அணியை வீழ்த்தியதுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “சரியான நேரத்தில் எல்லோரும் முன்னேறி வந்ததாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். எந்த சூழ்நிலையிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் நாங்கள் இருக்கிறோம். ரிக்கி பாண்டிங்குடன் செயல்படுவது அற்புதமாகவுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு தனிநபரின் நம்பிக்கையைப் பெற முடிந்தது. மேலும் அந்த உறவை நாம் முழுவதும் பராமரிக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.
Also Read: LIVE Cricket Score
இன்றைய ஆட்டத்தில் பிரியன்ஷ் ஆர்யா விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு தனிநபரும் அச்சமின்றி இருந்திருக்கிறார்கள். அவர் வலைகளில் சிறப்பாக செயல்படுவதை போலவே களத்திலும் பிரதிபலிக்கிறார். ஜோஷ் இங்கிலிஸ் பற்றி பேசினால் அவர் புதிய பந்தை விளையாடுவதை விரும்புகிறார், மேலும் அவர் இன்னும் பல பந்துகளை விளையாட வேண்டும் என்று நான் விரும்பினேன். மேலும் அவர் தனது அதிரடியை தொடர்வார் என்று நம்புகிறேன்” என்று கூறிவுள்ளார்.