டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் பாகிஸ்தானும் தங்கள் முதல் போட்டியில் மோதுகின்றனர். இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமின் தலைமையிலும் மோதுகின்றன. 

Advertisement

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவரும் இந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் கேப்டன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், “நாளை நடைபெறும் போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. போட்டி முழுமையாக நடைபெற இருந்தால், நன்றாக இருக்கும். ஆனால் மழையின் காரணமக குறுகிய வடிவிலான போட்டியாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

Advertisement

இந்திய அணியை பொறுத்தவரை டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து பந்துவீச்சாளர்களை மிரட்டுகிறார். எங்களிடம் சூர்யகுமார் யாதவ் மட்டுமல்ல, ஒவ்வொரு வீரருக்கும் திட்டங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் சரியாகச் செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன்

ஆசிய கோப்பை சர்ச்சையால் பிசிசிஐ மற்றும் பிசிபி இடையே நிறைய பதற்றம் இருக்கலாம். ஆனால் இரு தரப்பு வீரர்களும் ஒருவருக்கொருவர் நல்ல உறவைக் கொண்டுள்ளனர். நாங்கள் இந்திய வீரர்களுடன் ஒரு நல்ல பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். அதைத்தான் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் செய்கிறார்கள். நாங்கள் அனைவரும் எங்கள் அணிகளுக்கு 100 சதவீத பங்களிப்பை கொடுப்பது களத்திலும் எங்களுக்கிடையே நல்ல உறவுக்கு உதவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News