ரிஷப் பந்தை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம் - பாட் கம்மின்ஸ்!

Updated: Tue, Sep 24 2024 12:02 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றன. அதன்படி ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்திய வீரர் ரிஷப் பந்த் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒவ்வொரு அணியிலும் விளையாட்டை தங்களுக்கு சாதகமாக மாற்றக்கூடிய ஒன்று அல்லது இரண்டு அதிரடியான வீரர்கள் இருக்கிறார்கள். அந்தவகையில் எங்கள் அணியிலும் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்ச் மார்ஷ் என்ற இரண்டு அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள்.

Also Read: Funding To Save Test Cricket

ஹெட் மற்றும் மார்ஸ் இருவரும் ரிஷப் பண்ட்டை போல ஏதாவது ரிவர்ஸ் லேப் ஷாட் கூட ஆடலாம். அது ஒரு நம்பமுடியாத ஷாட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்படியான ஷாட்கள் உருவானதில் ரிஷப் பந்தின் பங்கு அதிகமாக இருக்கிறது என நினைக்கிறேன். தற்போது அப்படியான அபத்தமான ஷாட்கள் எல்லாம் அதிகாமகிவிட்டதற்கு நாம் பழக்கமாகிவிட்டோம், கடந்த இரண்டு தொடர்களில் எங்களுக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ரிஷப் பந்த். அதனால் எதிர் வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் அவரை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை