ஜெய்ஸ்வால், நிதிஷ் போன்ற வீரர்கள் தேவை - சுனில் கவாஸ்கர்!

Updated: Mon, Jan 06 2025 10:15 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோரின் பேட்டிங் கவலையளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதேசமயம் இறுதியில் ரிஷப் பந்த் ரன்களைச் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் தொடர்ந்து சோபிக்க தவறியதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் இத்தொடரில் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயாமாக இருந்தது யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி அகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது மட்டும் தான். அவர்களுடன் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் சில சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி போன்ற வீரர்கள் தான் இந்திய அணிக்கு தேவை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “இத்தொடர் குறித்து பேசினால் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு பெயர் வாங்க வேண்டும் என்ற பசியில் இருக்கிறார்கள். தனக்கென ஒரு பெயரைப் பெற வேண்டும் என்று அவர்கள் பசியுடன் இருக்கிறார்கள். அத்தகைய வீரர்கள் தான் நமக்கு தற்போது தேவை. தங்கள் விக்கெட்டை தங்கள் உயிரைப் போல பாதுகாக்கும் வீரர்கள் தேவை. உங்களுக்கு அத்தகைய வீரர்கள் தேவை.

Also Read: Funding To Save Test Cricket

மற்ற வீரர்களும் அவர்கள் போல விளையாடலாம், ஆனால் நான் பார்க்க விரும்பும் அர்ப்பணிப்பு மற்ற வீரர்களிடம் இல்லை. அதனால்தான் ஜனவரி 23 அன்று, ரஞ்சி கோப்பை போட்டிகளில், யார் விளையாடுவார்கள் என்று பார்க்க நான் ஆர்வமாக உள்ளேன்? நான் அதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டிகள் நடக்கும். அத்தொடரில் விளையாடாதவர்கள் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுவார்களா இல்லையா? என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை