ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 112 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 107 ரன்களையும், ஷுப்மன் கில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 93 ரன்களையும் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய அக்ஸர் படேல், “வெளிப்படையாக கூற வேண்டும் எனில் அவர்கள் பேட்டிங் செய்த விதத்தைப் பார்க்கும் போது, அவர்கள் விக்கெட்டுகளை இழக்கவில்லை என்றால், சேஸிங் செய்வது எளிதாகிவிடும். ஆட்டம் முன்னேறும்போது விக்கெட் சிறப்பாக இருந்தது என்று நினைத்தேன். இது ஒரு சமமான ஸ்கோர் என்று நினைத்தேன், மேலும் கேல் ராகுல் இன்னிங்ஸை முடித்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. 

Also Read: LIVE Cricket Score

அதனால் இது ஒரு நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம். பந்து வீச்சாளர்கள் கடுமையாக முயற்சித்தார்கள், ஆனால் இன்று எங்களால் வெற்றி பெற முடியவில்லை. நாங்கள் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தலும், பவர்பிளேயில் எங்கள் ஃபீல்டிங்கையும் பந்துவீச்சையும் மேம்படுத்த வேண்டும். மேலும் இந்த விக்கெட்டில் முதல் இன்னிங்ஸை காட்டிலும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது மிகவும் எளிதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News