நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க விரும்புகிறோம் - ஜோஸ் பட்லர்!

Updated: Thu, Jan 23 2025 10:15 IST
Image Source: Google

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்ததுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடியான தொடக்கத்தை வழங்கி 26 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான் அபிஷேக் சர்மா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசியதுடன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 

அதன்பின் அபிஷேக் சர்மா 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 79 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, திலக் வர்மா 19 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 12.5 ஓவர்களிலேயே வெற்றியை இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த டி20 தொடரில் முன்னிலையும் பெற்றுபெற்றுள்ளது. 

இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், “ஆரம்பத்தில் விக்கெட்டில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது, அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அது உண்மையிலேயே நல்ல விக்கெட் போல இருந்தது, அவர்கள் கொஞ்சம் அசைவைக் கண்டறிந்தனர், அதனால் நாங்கள் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் நீங்கள் அந்த கட்டத்தை கடந்து வந்தால், அது ஒரு நல்ல பிட்ச் மற்றும் வெளிப்படையாக வேகமாக ஸ்கோர் செய்யும் மைதானமாக இருந்தது.

எங்களிடம் உண்மையிலேயே சில நல்ல வீரர்கள் இருக்கிறார்கள், நாங்கள் விளையாட விரும்பும் ஆட்டத்தை செயல்படுத்த விரும்பினோம். ஆனால் இன்று சில நல்ல பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதை செய்ய எங்களால் முடியவில்லை. அதனால் அடுத்த போட்டியை எதிர்நோக்கி நகர்கிறோம். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜோஃப்ரா அர்ச்சர் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் எங்கள் அணியின் ஒரு சூப்பர் ஸ்டார், மேலும் அவர் எதிரணிக்கு அச்சுறுத்தலாகத் தெரிகிறார்.

Also Read: Funding To Save Test Cricket

அவர் இன்னும் சில விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கலாம் என்று நினைத்தேன். மார்க் வுட்டும் வேகமாகப் பந்து வீசினார். அவர்கள் இருவரும் இணைந்து செயல்படுவதைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க விரும்புகிறோம், ரசிக்கள் பார்க்கக்கூடியவர்களாக இருக்க விரும்புகிறோம். ஆனால் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் ஒரு அணிக்கு எதிரான இதனை செய்வதற்கு மிகவும் உற்சாகமானதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை