எஸ்ஏ20 லீக் தொடரானது டி20 உலகக்கோப்பைக்கு உதவும் - கிரேம் ஸ்மித்!

Updated: Mon, Jan 08 2024 18:40 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரை முன்மாதிரியாக வைத்து தொடங்கப்பட்டது தென் ஆப்பிரிக்க டி20 தொடர். இந்த டி20  தொடரில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே இந்த 6 அணிகளுக்கும் உரிமையாளர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரின் இரண்டாவது சீசன் நாளை மறுநாள் (ஜனவரி 10) முதல் தொடங்கி பிப்ரவரி 10 வரை நடைபெறவுள்ளது. 

கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் பிரிடோரியா கேப்பிடல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க வீரர்களின் திறமையை தென்னாப்பிரிக்க டி20 (எஸ்ஏ டி20) தொடரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தென் ஆப்பிரிக்க டி20 லீக்கின் தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தென் ஆப்பிரிக்க டி20 தொடரின் இந்த சீசனை பார்ப்பதற்கு நான் ஆர்வமாக உள்ளேன். தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்காக நிறைய உழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில காரணங்களுக்காக நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன். முதலாவதாக தென் ஆப்பிரிக்க டி20 லீக்கின் 6 அணிகளும் மிகுந்த வலிமையான அணியாக உள்ளனர். அனைத்து அணிகளிலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சமபலத்துடன் தங்களது திறமையை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடருக்கும் தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கும் மிகப் பெரிய சம்பந்தம் உள்ளது. கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு இடையேயான உறவு அதிகரித்துள்ளது. இந்தியாவிலுள்ள ரசிகர்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகுந்த ஆதரவு அளிக்கின்றனர். டி20 உலகக் கோப்பை விரைவில் தொடங்கவுள்ளதால், தென் ஆப்பிரிக்க டி20 தொடர் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடிப்பதற்கான நல்ல  வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை