இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகம் முழுதும் பல கோடி ரசிகர்களைப் பெற்று வெற்றிகரமாக 15 சீசன்களை நிறைவு செய்துள்ளது. அனைத்து நாடுகளின் முன்னணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு 8 அணிகளோடு விளையாடப்பட்டு வந்த ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சேர்க்கப்பட்டன.

Advertisement

இதனால் 2022 ஐபிஎல் சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து 2023-2027 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு ஒளிபரப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிசிசிஐ-க்கு ரூ. 48 ஆயிரத்து 390 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

Advertisement

இதனால் தற்போது ஐபிஎல் தொடர் உலகின் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு லீக் தொடராக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் வரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் போட்டிகளை அதிகரிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பேசிய ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவர் அருண் சிங் துமால் கூறுகையில், "பிசிசிஐ மற்றும் ஐபிஎல் கவுன்சில் இணைந்து ஐபிஎல் தொடரை உலகின் நம்பர் 1 விளையாட்டு லீக்காக மாறுவதை உறுதி செய்யும். 

அந்த வகையில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு 74 போட்டிகளாகவும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு 84 போட்டிகளாகவும், 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு 94 போட்டிகளாகவும் அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். 

ஆனால் அணிகளின் எண்ணிக்கை 10 இல் மட்டுமே இருக்கும். அதை அதிகப்படுத்தினால், ஒரே நேரத்தில் போட்டியை நடத்துவது கடினமாகிவிடும்" என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News