சிறந்த முடிவுகளை உருவாக்க முயற்சிப்போம் -சல்மான் ஆகா

Updated: Sat, Mar 15 2025 19:39 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக  நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட கையோடு இத்தொடரை எதிர்கொள்கிறது. 

இதன் காரணமாக இத்தொடரின் மூலம் இரு அணிகளும் மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் படுதோல்வியின் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெற முயற்சி செய்வோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இத்தொடருக்கான எங்கள் அணியில் சில இளம் வீரர்கள் உள்ளனர், மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட பிறகு சர்வதேச அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த அவரளுக்கு இது ஒரு வாய்ப்பாகும். இந்த தொடருக்கான எங்கள் அணி மிகவும் சிறப்பாக தயாராகி வருகின்றனர். இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல முடிவுகளைப் பெற முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் படுதோல்வியைச் சந்தித்ததை அடுத்து அந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் மிக முக்கியமான மாற்றம் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சல்மான் ஆக டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரின் தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி எழுச்சிப்பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் டி20 அணி: ஹசன் நவாஸ், உமைர் யூசுப், முகமது ஹாரிஸ், அப்துல் சமத், சல்மான் அலி ஆகா (கேப்டன்), இர்ஃபான் நியாசி, குஷ்தில் ஷா, ஷதாப் கான், அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹந்தத் கான், முகமது அலி, ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப், சுஃபியான் முகீம், அப்ரார் அகமது, உஸ்மான் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை