பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டேதே வெற்றிக்கு காரணம் - கேஎல் ராகுல்!

Updated: Mon, Apr 08 2024 13:11 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நட்சத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அணிக்கு தேவையான தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறிய குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியதன் மூலம், இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று தெரியும். ஆனால் நாங்கள் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு ரன்களைச் சேர்க்கவில்லை.

இப்போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும் போது அது எங்களிடம் இருக்கும் இளம் பந்துவீச்சுக் குழுவிற்கு  உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். மேலும் இந்த விக்கெட்டில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு யோசனை அவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  குறிப்பாக இந்த சீசனில் விளையாடிய அனைத்து போட்டியிலும் அவர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். 

நாங்கள் முதலில் பேட் செய்து 160+ ஸ்கோர் அடித்த எந்த ஒரு போட்டியையும் நாங்கள் தோற்றதே இல்லை என்று ஒரு பதிவு சொல்கிறது. இதற்கு காரணம் எங்கள் இளம் பந்து வீச்சாளர்கள் தான். மேலும், நாங்கள் விளையாடிய இடம் மற்றும் சூழ்நிலைகளின் காரணமாகவும் இந்த வெற்றிகளை பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன். மேலும் இந்த விக்கெட்டில் நீங்கள் பவர்பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழப்பது சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தெரியும்.

மேலும் இப்போட்டியில் யாரவது ஒருவர் 70 முதல் 80 ரன்களைச் சேர்க்க வில்லை என்றால் எங்களால் 170 ரன்களுக்கு மேல் அடிப்பது கடினம். இந்த சீசனில் வரும் மணிமாறன் மிகவும் சிறப்பாக செயல்பட்டார், அவர் புதிய பந்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். பேட்டர்களை கட்டுப்படுத்துவதே அவரது வேலை. க்ருனால் பாண்டியா மிகவும் அனுபவம் வாய்ந்தவர், அவர் பல சீசன்கள் ஐபிஎல் விளையாடியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை