WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Tue, Jun 28 2022 14:35 IST
West Indies Clean Sweeps Bangladesh After Winning The Second Test By 10 Wickets (Image Source: Google)

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் ஆடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 234 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கைல் மேயர்ஸின் அபார சதம் (146) மற்றும் மற்ற வீரர்களின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 408 ரன்களை குவித்தது.

174 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேச அணி மொத்தமாக வெறும் 12 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்த நிலையில், 13 ரன்கள் என்ற ஒன்றுமே இல்லாத இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது.

மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாவும், தொடர் நாயகனாகவும் கைல் மேயர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை