AUS vs WI: ஒருநாள், டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

Updated: Thu, Jan 11 2024 11:41 IST
AUS vs WI: ஒருநாள், டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது.

இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் டெஸ்ட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான 15 வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும், டி20 அணிக்கு ரோவ்மன் பாவெலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் டி20 அணியில் ஆண்ட்ரே ரஸல், நிக்கோலஸ் பூரன் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி:  ஷாய் ஹோப் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், அலிக் அதானாஸ், டெடி பிஷப், கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் க்ரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், குடகேஷ் மோட்டி, க்ஜோர்ன் ஓட்டேலி, ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஓஷேன் தாமஸ், ஓஷேன் தாமஸ் ஜூனியர்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஷாய் ஹோப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோமரியோ ஷெப்ஃபர்ட், ஓஷேன் தாமஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை