WI vs SA, 5th T20I: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்? - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Jul 02 2021 14:56 IST
West Indies vs South Africa, 5th T20I – Prediction, Fantasy XI Tips & Probable XI (CRICKETNMORE)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 4 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் ஊள்ளனர்.

இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத்  தீர்மானிக்கும் 5ஆவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை1) நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  •         மோதும் அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  •         இடம்: தேசிய கிரிக்கெட் மைதானம், செயிண்ட் ஜார்ஜ்
  •         நேரம்: இரவு 11.30 மணி

போட்டி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் 

தென் ஆப்பிரிக்க அணியுடனான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தாலும் நேற்றைய போட்டியில் வெற்றியைப் பெற்றது. அதிலும் கிரேன் பொல்லார்டின் ஆட்டம் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. 

மேலும் எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், அண்ட்ரே ரஸ்ஸல், லிண்டல் சிம்மன்ஸ் ஒரு அதிரடி பட்டாளமே இருப்பது வெஸ்ட் இண்டீஸிற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.  

பந்துவீச்சில் டுவைன் பிராவோ ஒற்றை ஆளாய் அணிக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி முழு பலத்துடன் இருப்பாதல், இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

தென் ஆப்பிரிக்கா

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய போட்டியில் இறுதிவரை போராடியும் தோல்வியைத் தழுவியது.

அணியின் பேட்டிங் வரிசையில் குயின்டன் டி காக் ஒருவர் மட்டும் திடர்ந்து அதிரடியாக விளையாடி வருவது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பந்துவீச்சில் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ஜார்ஜ் லிண்டே ஆகியோர் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருவது அணிக்கு கிடைத்த கூடுதல் பலம். இதனால் நாளைய போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

நேருக்கு நேர்

  •     மோதிய ஆட்டங்கள் - 14
  •      வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 6
  •      தென் ஆப்பிரிக்க வெற்றி - 8

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ் - லிண்டெல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், சிம்ரன் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரெ ரஸ்ஸல், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ஓபெட் மெக்காய், ஃபிடல் எட்வர்ட்ஸ்.

தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி கோக் , ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி, லுங்கி இங்கிடி.

ஃபேண்டஸி லெவன் 

  •     விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக்
  •     பேட்ஸ்மேன்கள் - கீரேன் பொல்லார்ட், லெண்டெல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், ராஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா
  •     ஆல்ரவுண்டர்கள் - ஃபேபியன் ஆலன், ஆண்ட்ரே ரஸ்ஸல்
  •     பந்து வீச்சாளர்கள் - டுவைன் பிராவோ, தப்ரைஸ் ஷம்ஸி, காகிசோ ரபாடா.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை