ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 57 ரன்களையும் கேப்டன் ஹீதர் நைட் 21 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அஃபி ஃபிளெட்சர் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் ஹீலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 142 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

Advertisement

அதன்படி களமிறங்கிய் அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஹீலி மேத்யூஸ்- கியானா ஜோசப் இணை தொடக்க முதலே அதிரடியான விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். இதன்முலம் இந்த ஜோடி முதல் விக்கெட்டு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் ஆத்தினர். அதன்பின் கியானா ஜோசப் 52 ரன்னிலும் ஹேலி மேத்யூஸ் 50 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய ஷெமைன் காம்பெல் 5 ரன்னிலும், டீன்ட்ரா டாட்டின் 27 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தாலும், இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி நடப்பு மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. 

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அந்த அணி வீராங்கனைகள் சில சாதனைகளைப் படைத்துள்ளனர். அதன்படி ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகமுறை அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி 2ஆவது அணி எனும் பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 9 முறையும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 6 முறையும் முன்னேறி அசத்தியுள்ளன. 

மேற்கொண்டு இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் புதிய மைல் கல் ஒன்றை எட்டினார். அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் தனது 100ஆவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஹீலி மேத்யூஸ் அதில் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் 100ஆவது போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய 5ஆவது வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 

Advertisement

இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் மரிஸான் கேப்ட, இங்கிலாந்தின் டேனியல் வையட், ஐயர்லாந்தின் லாரா டெலானி, நியூசிலாந்தின் சோஃபி டிவைன் உள்ளிட்டோர் தங்களது 100ஆவது டி20 போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் இரண்டு தொடக்க வீராங்கனைகளும் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம், உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக இந்த மைல் கல்லை எட்டி அசத்தியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News