குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாய வெற்றியை நோக்கி ஆர்சிபி அணி களமிறங்கியது. இந்த சீசனில் மோசமாகஆடி வரும் விராட் கோலி, இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்து மீண்டும் ஃபார்முக்குத் திரும்பினார்.

Advertisement

அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணியையும் வெல்லவைத்து ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளார். 

Advertisement

மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும் இல்லாவிட்டால், ப்ளே ஆப் சுற்று ஆர்சிபி பக்கம் சென்றுவிடும். ஆதலால், இன்றைய ஆட்டம் பரபரப்பாகியுள்ளது.

இந்த சீசனில் விராட் கோலி மிகவும் மோசமாக ஆடியுள்ளார். இதுவரை 14 போட்டிகளில் ஆடிய கோலி 2 அரைசதம் உள்ளிட்ட 236 ரன்கள்தான் சேர்த்துள்ளார்.

இதனிடைய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக, இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர், விராட் கோலியிடம் வந்து பேட்டிங் ஆலோசனை கேட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஜாஸ் பட்லர் 3 சதங்கள், 3 அரைசதங்கள் உள்ளிட்ட 627 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பி பெற்றுள்ளார். இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச்சியில், ஹர்பஜன் சிங் நடத்தும் நிகழ்ச்சியில் விராட் கோலி பங்கேற்றார். 

Advertisement

அதில் அவர் பேசுகையில் “ ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போட்டிக்குப்பின், ஜாஸ் பட்லர் என்னிடம் வந்து பேட்டிங் ஆலோசனை கேட்டார். நான் அவரிடம், நான் உங்களிடம் சில விஷயங்களைக் கேட்க வேண்டும்.

நீங்கள்தான் ஆஞ்சு தொப்பி வைத்திருக்கிறீர்கள், அதிகமான ரன்களை ஸ்கோர் செய்துள்ளீர்கள். என்னிடம் என்ன ஆலோசனை கேட்கப் போகிறீர்கள்.  நான் இந்த ஐபிஎல் சீசனில் ரன்கள் போதுமான அளவில் அடிக்கவில்லையே. இதைக் கேட்டவுடன் நாங்கள் இருவரும் சிரித்துவிட்டோம்” எனத் தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News