WI vs AUS: லூயிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியாவை பந்தாடிய விண்டீஸ்!

Updated: Sat, Jul 17 2021 10:06 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி மிதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எவின் லூயிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தர். இப்போட்டியில் 34 பந்துகளை எதிர்கொண்ட லூயிஸ் 9 சிக்சர், 4 பவுண்டரி என 79 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்களும் தங்கள் பங்கிற்கு சில சிக்சர்களை பறக்க விட, 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணிதரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் இப்போட்டியிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 

இதனால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 183 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷெல்டன் காட்ரெல், ரஸ்ஸல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் முடித்துள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய எவின் லூயிஸ் ஆட்டநாயகனாகவும், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை