West Indies vs Bangladesh 1st T20I Dream11 Prediction: வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Advertisement

.இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான  டி20 தொடரானது நாளை தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்ட்டில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளதன் காரணமாக டி20 தொடரிலும் வெற்றியை தொடரும் முனைப்பில் விளையாடவுள்ளது. மறுபக்கம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய வங்கதேச அணியானது இந்த டி20 தொடரையாவது கைப்பற்றி கம்பேக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

WI vs BAN 1st T20I: Match Details

  • மோதும் அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம்
  • நேரம்: டிசம்பர் 16, அதிகாலை 5 மணி (இந்திய நேரப்படி)
  • இடம்: அர்னோஸ் வேல் மைதானம், செயின்ட் வின்செண்ட்

WI vs BAN 1st T20I Live Streaming Details

வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. இருப்பினும் தொடரை காண விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம். 

WI vs BAN: Head-to-Head In Tests

  • Total Matches: 16
  • West Indies: 09
  • Bangladesh: 05
  • No Result: 02
Advertisement

WI vs BAN: Ground Pitch Report

வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இப்போட்டி செயின்ட் வின்செண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 06 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 03 முறை முதலில் பந்துவீசிய அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ள்ன. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 125 ரன்களாகவும், இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 159 ரன்களாக உள்ளது. இதனால் இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

West Indies vs Bangladesh Probable XIs

Advertisement

வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், எவின் லூயிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல் (கே), ரோஸ்டன் சேஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப், அகில் ஹொசைன்.

வங்க்தேசம்: சௌமியா சர்க்கார், தன்சீத் ஹசன், லிட்டன் தாஸ் (கே), மெஹ்தி ஹசன் மிராஜ், ஜாகர் அலி, அபிஃப் ஹுசைன், மெஹ்தி ஹசன், ரிஷாத் ஹுசைன், தன்சீம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, நசீம் அகமது.

WI vs BAN T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: லிட்டன் தாஸ் (துணைக்கேப்டன்), நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ்: எவின் லூயிஸ், பிராண்டன் கிங் (கேப்டன்), ரோவ்மன் பாவெல், தன்ஸித் ஹசன்
  • ஆல்-ரவுண்டர்கள்: ரொமாரியோ ஷெப்பர்ட், மெஹிதி ஹசன் மிராஸ், சௌமீயா சர்க்கார்
  • பந்துவீச்சாளர்கள்: தஸ்கின் அஹ்மத், அல்ஸாரி ஜோசப்
Advertisement

WI vs BAN 1st T20 Dream11 Prediction, WI vs BAN Dream11 Prediction, Today Match WI vs BAN, WI vs BAN T20 Series, WI vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs Bangladesh

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News