வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் - பிராண்டன் கிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மேயர்ஸ் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், ஹெட்மையர் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

அதன்பின் இணைந்த பிராண்டன் கிங் - கேப்டன் ரோவ்மன் பாவெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் ரோவ்மன் பாவெல் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 50 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆண்ட்ரே ரஸலும் 14 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிராண்டன் கிங் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 82 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித், தைமல் மில்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இப்போட்டியிலும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட் 25 ரன்களிலும், வில் ஜேக்ஸ் 24 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் கலமிறங்கிய சாம் கரண அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஆனால் மறுப்பக்கம் லியாம் லிவிங்ஸ்டோன் 17 ரன்களிலும், ஹாரி ப்ரூக் 5 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்த கையோடு 4 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசிய சாம் கரணும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் மோயின் அலி அதிரடியாக விளையாடி அணிக்கு நம்பிக்கை கொடுத்தாலும், மறுபக்கம் இருந்த வீரர்களால் சோபிக்க முடியவில்லை. 

Advertisement

இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News