வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 507 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 

Advertisement

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் ஆட் டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் பிராத்வெயிட் , பிளாக்வுட் சதம் அடித்தனர்.

Advertisement

நேற்று 4ஆவது நாள் ஆட்டம் நடந்தது. 219 ரன்கள் பின்தங்கி, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது. அந்த அணி 187.5 ஓவர்களில் 411 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது இங்கிலாந்து ஸ்கோரை விட 96 ரன் குறைவாகும்.

கேப்டன் பிராத்வெயிட் 160  எடுத்து ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ‌ஷகீப் மக்மூது தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்நிலையில் 96 ரன்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்து இருந்தது.  

இதையடுத்து இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து 202 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அந்த அணியிடம் கைவசம் 7 விக்கெட் இருக்கிறது. 

Advertisement

அதுமட்டும் இல்லாமல் மழை குறுக்கிட்டதன் விளைவாக ஆட்டம் பாதியிலேயே தடைப்பட்டுள்ளது. எனவே, முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டும் டிராவில் முடிய அதிகமான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News