வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியாது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவுசெய்து தொடரை சமநிலையில் வைத்திருந்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு வழக்கம் போல் பிலிப் சால்ட் - கேப்டன் ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோஸ் பட்லர் 11 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய பிலிப் சால்ட் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வில் ஜேக்ஸ் 7, லியாம் லிவிங்ஸ்டோன் 28, ஹாரி ப்ரூக் 7, மொயீன் அலி 23, சாம் கரண் 12 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ், ரேஹன் அஹ்மத், ஆதில் ரஷித் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் 19.3 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி, 3 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரே ரஸல், அகீல் ஹொசைன், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 10 ரன்களுக்கும், ஜான்சன் சார்லஸ் 27 ரன்களிலும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் - ரூதர்ஃபோர்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

பின் 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 30 ரன்களை எடுத்திருந்த ரூதர்ஃபோர்ட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவெல் 8 ரன்களிலும், ஆண்ட்ரே ரஸல் 3 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஷாய் ஹோப் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக குடகேஷ் மோட்டியும், தொடர் நாயகனாக பிலிப் சால்ட்டும் தேர்வுசெய்யப்பட்டனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News