வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதலாவது டி20ஐ- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 

Updated: Tue, Dec 12 2023 11:57 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2- 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று பார்போடாஸில் நடைபெறுகிறது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
  • இடம் - கென்னிங்ஸ்டன் ஓவல், பார்போடாஸ்
  • நேரம் - அதிகாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • வெஸ்ட் இண்டீஸ் - 14
  • இங்கிலாந்து - 10

பிட்ச் & வெதர் ரிப்போர்ட்

பார்படாஸில் உள்ள ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி 178 ரன்களாக உள்ளது. இதனால் இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு பந்துவீச்சுக்கும் இடையே ஒரு அற்புதமான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உத்தேச லெவன்

வெஸ்ட் இண்டீஸ்: கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ரோவ்மேன் பவல்(கே), நிக்கோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோஸ்டன் சேஸ்/ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், மேத்யூ ஃபோர்டே, அகீல் ஹோசைன்

 இங்கிலாந்து: ஃபில் சால்ட், ஜோஸ் பட்லர் (கே), வில் ஜாக்ஸ், பென் டக்கெட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கரன், ரெஹான் அகமது, ஜான் டர்னர், கஸ் அட்கின்சன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஷாய் ஹோப்(கேப்டன்), ஜோஸ் பட்லர்
  • பேட்டர்ஸ்: பில் சால்ட், ரோவ்மேன் பவல்
  • ஆல்-ரவுண்டர்கள்: ரொமாரியோ ஷெப்பர்ட், கைல் மேயர்ஸ், சாம் கரண், மொயின் அலி (துணைக்கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், அகீல் ஹொசைன்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை