வெஸ்ட் இண்டிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

Advertisement

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பார்போடாஸிலுள்ள கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளதால். இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
  • இடம் - கென்னிங்ஸ்டன் ஓவல், பார்போடாஸ்
  • நேரம் - இரவு 11 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

பார்படாஸில் உள்ள ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி 226 ரன்களாக உள்ளது. இதனால் இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு பந்துவீச்சுக்கும் இடையே ஒரு அற்புதமான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 104
  • இங்கிலாந்து - 53
  • வெஸ்ட் இண்டீஸ் - 45
  • முடிவில்லை - 06
Advertisement

உத்தேச லெவன்

வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கேசி கார்டி, ஷாய் ஹோப் (கே), அலிக் அதானாஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், யானிக் கரியா, ரொமாரியோ ஷெப்ஃபர்ட், மேத்யூ ஃபோர்டே, அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி.

இங்கிலாந்து: பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், பிரைடன் கார்ஸ், ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன்.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஷாய் ஹோப் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள்: பிராண்டன் கிங், ஸாக் கிரௌலி, ஹாரி புரூக் (துணை கேப்டன்), பென் டக்கெட்
  • ஆல்-ரவுண்டர்: லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், வில் ஜாக்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்
  • பந்துவீச்சாளர்கள்: கஸ் அட்கின்சன்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News